ஊடகவியலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியிட்ட அரசு
அடுத்த வருடம் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் ஆரம்பிக்க எதிர்த்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அசி திசி ஊடகவியல் புலமைப்பரிசில் திட்டத்தின் 2025 புலமைப்பரிசில் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (22) நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சகம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “2006 ஆம் ஆண்டு 11 ஊடகவியலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் வெகுஜன ஊடக அமைச்சினால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், இதுவரை 1133 ஊடகவியலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர்கள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் ஊடக துறையில் தங்கள் தொழில் சார் திறன்களை வளர்த்துக் கொள்ள அரசாங்கம் வாய்ப்புகளை வழங்கி வருகின்றன,
புதிய ஊடகக் கொள்கையைத் தயாரித்தல், பத்திரிகையாளர்களுக்கான நெறிமுறைக் கோவையைத் தயாரித்தல் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான நிறுவனத்தைத் தொடங்குதல் போன்ற பல திட்டங்களை வெகுஜன ஊடக அமைச்சகம் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.
ஊடகத் துறை ஒரு சமூகத்தின் நான்கு முக்கிய தூண்களில் ஒன்றாகும். மற்ற மூன்றும் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைகள்.
ஊடகவியலாளர்களுக்கான காப்பீடு
அரசியல் துறை என்பது ஆய்வு செய்யப்பட்டு பயிற்சி பெற வேண்டிய ஒரு துறை என்றும், பொதுமக்களின் ஒப்புதலுடன் அரசியல் துறையில் நுழைந்த பிறகு, ஒருவர் தனது திறன்கள், திறமைகள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பத்திரிகைத் துறைக்கும் பொருந்தும்.
பத்திரிகையாளர்கள் பங்களித்தால், அரசாங்கம் எதிர்பார்த்தபடி முன்னேற முடியும். வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி படிப்புகள், பட்டங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றத் திட்டங்களில் உள்ளூர் பத்திரிகையாளர்களை ஈடுபடுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும்,
உள்ளூர் பத்திரிகையாளர்கள் விரைவில் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்க எதிர்பார்ப்பார்கிறோம் என்றார்.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க, ஊடக அமைச்சின் கூடுதல் செயலாளர்கள் தீபா லியனகே, என்.ஏ.கே.எல். விஜேநாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷன், மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 11 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்