சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்த புலனாய்வுத் துறை - இரகசியங்களை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்
புலனாய்வுத் துறையினர் சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்ததாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கூறியுள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் அறிந்த தகவல்களை கூற முயலும் போது எங்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர்.
சஹ்ரானை கைது செய்வதற்கு நாலக சில்வா நடவடிக்கை எடுத்த போது, முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மற்றும் கோட்டாபய ராசபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்ய திட்டமிட்டதாக கூறி நாலக சில்வாவை கைது செய்து, சஹ்ரானின் கைதை தடுத்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் சட்டமா அதிபரே விசாரணை அறிக்கையை முழுமையாக பார்த்துள்ளார். இது அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான சூழ்ச்சியின் பெறுபேறே என்று கூறியுள்ளார்.
நாங்கள் இதுபோன்ற கருத்துக்களை கூறும் போது எங்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர். இதன்மூலம் எமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என தெரிவித்தார்.