இடைக்கால அரசாங்கம்! இறுதி முடிவை அறிவித்த ஜே.வி.பி

Go Home Gota Gotabaya Rajapaksa Sri Lankan Peoples
By Kiruththikan Apr 26, 2022 09:29 AM GMT
Report

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவர் எம்.பி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், அரச தலைவர் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானாலும், ஆட்சி கவிழ்ந்தாலும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்.

இந்த அரசாங்கத்தினால் முழு நாடும் பொதுமக்களும் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“உடன்பிறப்புகள் மற்றும் மகன்களைக் கொண்ட இந்த ஆட்சி நாட்டு மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தேசத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் திராணியற்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் அரச தலைவரும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என ஜே.வி.பி தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நிறுவி அதன் பின்னர் தேர்தலை நடத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆசியுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் மக்கள் சக்தியை பயன்படுத்தி நிலைமையை தீர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.  

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026