நிவாரணத்துக்கு சென்ற ஹெலிகொப்டர் விபத்து: உள்ளக விசாரணைகள் ஆரம்பம்!
பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் தொடர்பாக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த விசாரணைகளுக்காக இலங்கை விமானப்படையால் உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர், அவசரநிலை காரணமாக நேற்று (30.11.2025) பிற்பகல் லுனுவில பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அதிலிருந்த ஐந்து விமானப்படை வீரர்கள் சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், இவ்வாறு விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் தலைமை விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் சிக்கிய ஏனைய நான்கு அதிகாரிகள் இன்னும் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |