366 பேரின் உயிரைப் பறித்த “டித்வா” புயல்: தொடரும் மீட்பு பணிகள்!

Sri Lanka Weather Rain
By Kanooshiya Dec 01, 2025 12:59 PM GMT
Report

புதிய இணைப்பு

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நான்காம் இணைப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் , 366 பேரை தற்போது வரையில் காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.

366 பேரின் உயிரைப் பறித்த “டித்வா” புயல்: தொடரும் மீட்பு பணிகள்! | Death Toll Has Increased To 193

309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகபட்சமாக 88 மரணங்கள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 68 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலில் 35 பேரும் அனர்த்தம் காரணமாக இதுவரை காணாமல் போயுள்ளனர்.     

இரண்டாம் இணைப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் இதுவரையில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

366 பேரின் உயிரைப் பறித்த “டித்வா” புயல்: தொடரும் மீட்பு பணிகள்! | Death Toll Has Increased To 193

அதன்படி, 218 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முதலாம் இணைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

அதன்படி, சீரற்ற வானிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அனர்த்தங்களில் சிக்கி 228 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30.11.2025) பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாவிலாறு மீட்பு பணி!

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாவிலாறு மீட்பு பணி!

வெள்ளம் மற்றும் மண்சரிவு

குறித்த அறிக்கையின் படி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

366 பேரின் உயிரைப் பறித்த “டித்வா” புயல்: தொடரும் மீட்பு பணிகள்! | Death Toll Has Increased To 193

வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நாடு முழுவதும் 1,094 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 1,47,931 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

உடைப்பெடுத்தது மாவிலாறு : மூதூரைத் தொடர்ந்து மூழ்கும் கிண்ணியா!

உடைப்பெடுத்தது மாவிலாறு : மூதூரைத் தொடர்ந்து மூழ்கும் கிண்ணியா!

அரநாயக்கவில் சரிந்து விழுந்த மலைத்தொடர்! முற்றாக மூடப்பட்ட கண்டி கொழும்பு வீதி

அரநாயக்கவில் சரிந்து விழுந்த மலைத்தொடர்! முற்றாக மூடப்பட்ட கண்டி கொழும்பு வீதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026