யாழ் பல்கலையில் “என் வாழ்க்கை அவருடைய செய்தி“என்ற தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு
உடல் நலன் மற்றும் விருத்தி தொடர்பான சர்வதேச மாநாடு நாளை (28) காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெறவுள்ள இந்த மாநாடானது நாளை 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
செயலமர்வுகள்
"என் வாழ்க்கை அவருடைய செய்தி" (My Life is His Message) என்ற தொனிப்பொருளின் கீழ் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் உள்ள ஹூவர் கேட்போர் கூடத்தில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.
பஜனைகள், சொற்பொழிவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பான கலந்துரையாடல்கள், உடல் நலன் தொடர்பான செயலமர்வுகள் என பல்வேறு வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த மாநாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு பொறுப்பான தலைவர்களான மனோஜ் குமார் சிங், நரேந்திரநாத் ரெட்டி, குழந்தை நல மருத்துவ நிபுணர் ராமதேவி சங்கரன் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
