இலங்கை நாடாளுமன்றத்தினுள் 'நந்தி ஒழிக' பதாகை! கொதித்தெழுந்தது இந்து மத பீடம்
sri lanka
people
parliament
hindus
By Shalini
நாடாளுமன்றத்தினுள் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 'நந்தி ஒழிக' என்று எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தமைக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்து மத பீடம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்து மத மக்களின் மனதை இவ்விடயம் பெரிதும் புண்படுத்துவதாக உள்ளது. சிவ ஆலயங்களில் நந்தீஸ்வரர் வழிபாடு சிவ பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நந்தி ஒழிக என்ற பதாகை இந்து மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இப்பதாகையை தாங்கியதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்து மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என சர்வதேச பீடம் சார்பாக சிவாச்சாரியார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி