ரணிலுக்கு ஆதரவாக பிரித்தானியாவை நாடும் முக்கிய கட்சி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவின் கைது தொடர்பில் எதிர்காலத்தில் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த பல தூதர்களைச் சந்தித்து கலந்துரையாட விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு நேற்று (24) இரவு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கான சீனத் தூதரை இன்று சந்தித்து இந்த விடயம் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறினார்.
ரணிலுக்கு இழைக்கப்பட்ட அநீதி
மேலும், இது குறித்து மற்ற தூதரகங்களுக்கும் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ருவான் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல ஆகியோரின் தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களைச் சந்தித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த அரசியல் பழிவாங்கல் மற்றும் இந்த ஜனநாயக விரோதச் செயல் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்தப் போவதாகவும் வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

