சுரேஷ் சலே வழக்கில் குறுக்கீட்டு மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டது!
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பான இடைமனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06-08-2026)) ஒத்திவைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறுக்கீட்டு மனுக்கள் ஒத்திவைப்பு
குறித்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, இம்மனுவுக்கு எதிராக இடைமனு தாக்கல் செய்த கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் உட்பட பல இடைமனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

வாதப் பிரதவாதங்களைச் செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம், குறித்த இடைமனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை ஆகஸ்ட் பத்தாம் ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |