மயிரிழையில் தப்பிச் சென்ற தலைவர் பிரபாகரன்- இந்திய உயரதிகாரியின் அனுபவப் பகிர்வு
1988ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவரை பிடிப்பதற்கு அல்லது அவரை கொலை செய்வதற்காக இந்தியப் படை மேற்கொண்ட நித்தகைக்குள முற்றுகை பற்றிய பதிவுகள் இவை:
இந்தியப் இராணுவத்தின் 'கூர்க்கா' படைப்பிரிவினரே நித்தகைக்குள முற்றுகையில் பிரதானமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
கூர்க்காப் படையினர் பார்வைக்கு சீனர்களைப் போன்ற தோற்றத்தை உடையவர்கள்.
குறைந்த உயரத்தையும், அதேவேளை உறுதியான தேகத்தையும் உடையவர்கள் - மிகவும் கொடூரமானவர்கள்.
தமது இடுப்புப் பட்டியில் எப்பொழதும் அவர்கள் ஒரு சிறு வாளை இணைத்து வைத்திருப்பார்கள்.
உறையில் இருந்து அந்த வாளை வெளியில் எடுத்தால் இரத்தம் காணாமல் மீண்டும் உறையில் போடமாட்டார்களாம்.
'கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்கமாட்டார்கள் என்ற வைராக்கியம் கொண்ட கூர்க்காப் படையினர், நித்தகைக்குளக் காடுகளில் உள்ள கறையான் புற்றுகளின் அருகே இரத்தம் காணாத கத்திகளுடன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருந்தார்கள் 'என்று நித்தகைக் குள சண்டைகள் பற்றிப் பதிவு செய்த ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார்.
யுத்தக் களமாகிவிட்டிருந்த நித்தகைக்குள முற்றுகை பற்றியும், அந்த நித்தகைக்குள அனுபவங்கள் பற்றிய இந்தியப் படை உயரதிகாரி ஒருவரின் அனுபவப்பதிவு பற்றியும் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:
இந்தியப்படையின் நித்தகைக்குள முற்றுகை! எப்படித் தப்பினார் பிரபாகரன்? |
