சிறிலங்கன் எயார்லைன்ஸின் முறைகேடுகள் குறித்து விசாரணை
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை, தனியார்) நிறுவனம் மற்றும் சிறிலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) 2025 ஜூன் 30ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்த நிலையில், 2025 ஜூலை 01 ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் சிறிலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு நிறுவப்பட்டது.
முன்பதிவு செய்யுமாறு கோரிக்கை
இந்த நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் சிறிலங்கன் விமான சேவை ஆகியவற்றின் ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற குறித்த குழு எதிர்பார்க்கின்றது.
இது தொடர்பில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025 செப்டெம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் psicairport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி (Email) அல்லது 070-3307700 என்ற Whatsapp எண்ணுக்கு தமது கோரிக்கைகளை அனுப்பி, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு கேட்டுக்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
