போலி மருந்துகளை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு
போலி ஆவணங்கள் மற்றும் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றை சந்தைக்கு விடுவதை நிறுத்துமாறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுகாதார அமைச்சரின் ஆலோசகர், அரச சார்பற்ற நிறுவனம், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் மற்றுமொருவர் இந்த முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர்.
விசாரணைகள்
இதேவேளை, இது தொடர்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
மேலும், குறித்த அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்து ஆவணங்களை சரிபார்த்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.