சிறுத்தை கடித்து ஒருவர் பலி: வனவிலங்கு காரியாலயம் மீது மக்கள் தாக்குதல்
srilanka
police
investigation
By Vasanth
வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். அம்பாறை - பானம பிரதேசவாசிகளால் நேற்றிரவு பானம வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த தாக்குதலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி பானம - குடும்பிகலயில் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்தமையையடுத்து, குறித்த பிரதேச வாசிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வனவிலங்கு காரியாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதமேற்படுத்திய 5 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி