இஸ்ரேல் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட இலங்கை பிரஜை

Sri Lanka Police Sri Lanka Israel Jordan
By Shadhu Shanker Feb 12, 2024 06:50 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in குற்றம்
Report

இளம் பெண்ணை கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுனர் ஒருவர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து பல வருடங்களாக இஸ்ரேலில் வாழ்ந்து, இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமான முறையில் வேலை பார்த்த இலங்கை பிரஜை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் இஸ்ரேலில் தங்கியிருந்த காலத்தில், பெண் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுக்கு இடையில் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! 8 நாட்களில் முதலிடம் பிடித்த ரஷ்யா

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! 8 நாட்களில் முதலிடம் பிடித்த ரஷ்யா

சட்டவிரோதமாக நாடு திரும்பல்

ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் மீண்டும் ஜோர்தான் எல்லையின் ஊடாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்துள்ளார்.

இஸ்ரேல் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட இலங்கை பிரஜை | Investigation To Srilankan Who Kidnap Girl Isreal

இதனையடுத்து அவர் குறித்த பெண்ணின் மகளை கடத்திச்சென்றதுடன், இலங்கையில் உள்ள தமது தந்தைக்கு குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை வைப்பிலிட்டால் மாத்திரமே அவரை விடுவிக்கமுடியும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த பெண் காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, வீடொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டதுடன் குறித்த நபரையும் கைது செய்தனர்.

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!

சட்ட நடவடிக்கைகள் 

இந்தநிலையில் பிரதிவாதி நாடு கடத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக நாடு திரும்பியமை, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கடத்தல் செய்தமை, திருட்டு மற்றும் தேவையற்ற தாக்குதல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேல் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட இலங்கை பிரஜை | Investigation To Srilankan Who Kidnap Girl Isreal

இதனையடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று இஸ்ரேலிய அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023