ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுத்த இந்தோனேசிய தூதுவர்

Sri Lankan Peoples Jeevan Thondaman Indonesia
By Dhilak Jan 10, 2024 03:36 PM GMT
Report

இந்தோனோசியாவில் நடைபெறவுள்ள நீர் சம்பந்தமான சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் அமைச்சரை கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் வைத்து இன்று (10.01.2024) சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் அரசியல், பொருளாதார காரணிகள் தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே


எதிர்கால வேலைத்திட்டங்கள்

அதேவேளை, தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், கொள்கை ரீதியில் ஏற்படவுள்ள மாற்றங்கள், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான வியூகங்கள் தொடர்பில் அமைச்சர் இதன்போது தூதுவருக்கு விளக்கமளித்துள்ளார்.

ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுத்த இந்தோனேசிய தூதுவர் | Invitation To Jeevan Dondaman To Come To Indonesia

அனைவருக்கும் சுகாதார பாதுகாப்புடன் குடிநீரை தடையின்றி வழங்குவதற்காகவும், நீர் கட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் தூதுவரிடம் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளின் நிலைவரம், அதனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், அதற்கு இந்தோனேசியா எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: கன்சர்வேடிவ் கட்சியின் தமிழர் பழமைவாதிகள் அமைப்பு பெருமிதம்

பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: கன்சர்வேடிவ் கட்சியின் தமிழர் பழமைவாதிகள் அமைப்பு பெருமிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்