கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்...! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை
அமைதியை நிலைநாட்டப் போகின்றோம் என முழக்கமிட்டு ஈழ மண்ணிற்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, அந்தத் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய நரகத்தை அரங்கேற்றியது என்பதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
யுத்தக் களத்தில் போராளிகளோடு நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவில்லாத ஒரு வல்லரசு இராணுவம், திக்கற்ற தமிழ் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் கௌரவத்தைச் சிதைத்த கோர அத்தியாயங்கள், இன்றும் ஆறாத வடுக்களாய் நம் சமூகத்தின் நினைவுகளில் ரத்தம் கசிகின்றன.
ஒவ்வொரு இந்தியப் படைவீரனும் எம் பெண்களைச் சீரழித்தது என்பது தனிமனிதக் குற்றமல்ல, அது ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையும் அச்சுறுத்தி அடிபணிய வைக்க இந்தியா கையாண்ட கீழ்த்தரமான போர் தந்திரம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
பெண்களின் கதறல்கள் ஓயாமல் ஒலித்த அந்தப் பயங்கரமான நாட்களில், இந்திய ஏகாதிபத்தியத்தின் போலி முகமூடி கிழிந்து தொங்கியது.
பாதுகாப்பிற்காக வந்தவர்கள் வேட்டையர்களாக மாறியபோது, அந்தப் பிஞ்சு உள்ளங்கள் அனுபவித்த மரண பயமும் சிதைக்கப்பட்ட கனவுகளும் இன்றும் அந்த மண்ணின் காற்றில் நீதிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன.
இந்திய இராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் வெறும் கடந்த காலக் கதைகள் அல்ல, அவை நீதி மறுக்கப்பட்ட ஒரு இனத்தின் தீராத ஆதங்கம்.
- இவ்வாறு இந்தியாவின் அதிகார மமதைக்கு ஈழத்துத் தாய்மார்கள் கொடுத்த விலை...
- அமைதிப்படை என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த வன்கொடுமைகளின் கசப்பான சாட்சியங்கள்...
என்பவற்றை சுமந்து வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அவலங்களின் அதியாயங்கள் நிகழ்ச்சி...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |