சிஎஸ்கே அணியின் தலைவராக தோனியே இருப்பதற்கான காரணம் இதுதான்!
தோனியின் கடைசி சீசன் என்பதால் ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி என்றாலே தோனி தான் என்ற அளவுக்கு அவரின் தலைமைத்துவத்திற்கு உதாரணமாக விளங்குகிறார்.
இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரையில் தோனியை தவிர இருவர் அணித்தலைவர்களாக இருந்துள்ளார்கள்.
சிஎஸ்கே அணியின் தலைவர்கள்
ஆனால் அவர்களின் மோசமான தலைமைத்துவம் காரணமாகவே தோனியே இன்னும் தலைவராக உள்ளார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று வீரர்கள் அணித்தலைவராக இருந்துள்ளனர்.
இவர்களில் தோனியை தவிர மற்ற இருவரும் 10 போட்டிகளுக்கு கூட அணித்தலைவராக செயற்பட்டதில்லை. 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாக்கப்பட்டதிலிருந்தே இன்று வரை நிரந்தர அணித்தலைவராக செயற்பட்டவர் தோனி மட்டுமே.
தோனி ஓய்வு எடுத்த சில போட்டிகளின் போது சுரேஷ் ரெய்னா அணித்தலைவராக பணியாற்றினார். அப்படி இதுவரை 6 போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், மூன்று தோல்விகள் மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்தது. இதனால், சுரேஷ் ரெய்னாவின் தலைமைத்துவம் சராசரியாகவே இருந்தது.
தோனியின் தலைமைத்துவம்
பின்னர் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தோனி தலைமை பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். அந்த தொடரின் முதல் 8 போட்டிகளுக்கு ஜடேஜா அணித்தலைவராக செயல்பட்டார்.
ஆனால் அதில் 2 வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளை சந்தித்தது சிஎஸ்கே அணி. அதன் பின் தோனி மீண்டும் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றார்.
2023 ஐபிஎல் தொடரிலும் அவரே அணித்தலைவராக இருந்து சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று தந்தார். தோனி இதுவரை சிஎஸ்கே அணிக்கு 235 போட்டிகளில் அணித்தலைவராக செயல்பட்டு இருக்கிறார்.
அடுத்த தலைவர்
அதில் 142 வெற்றிகள், 90 தோல்விகள், ஒரு போட்டி சமனில் முடிவடைந்துள்ளன. அணித்தலைவர் தோனியின் வெற்றி சராசரி 60.42 ஆகும்.
அணித்தலைவராக சுரேஷ் ரெய்னாவின் வெற்றி சதவீதம் 33.33 ஆகவும், ஜடேஜாவின் வெற்றி சதவீதம் 25 சதவீதமாகவும் உள்ளது.
சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா என இருவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் அணித்தலைவராக சிறப்பாக செயல்படவில்லை என்பதாலேயே தோனி நீண்ட காலமாக சிஎஸ்கே அணியின் அணித்தலைவராக இருப்பது மட்டுமின்றி 42 வயதிலும் ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டு இருக்கிறார்.
இந்த சீசன் தோனியின் கடைசி சீசன் என்று கூறப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இரசிகர்களிடம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |