சிஎஸ்கேயிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அடி: காயத்திற்குள்ளாகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்!

MS Dhoni Virat Kohli Chennai Super Kings Sri Lanka Cricket IPL 2024
By Shadhu Shanker Mar 16, 2024 02:34 PM GMT
Report

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் மற்றுமொரு வீரர் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண விளையாடாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் அடைந்த நட்சத்திர இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண குறைந்தது நான்கைந்து வாரங்களுக்கு விளையாடாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 இற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : நடைபெறும் நாடுகள் எவை தெரியுமா!

2026 இற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : நடைபெறும் நாடுகள் எவை தெரியுமா!

 மதீஷ பதிரண 

ஏற்கனவே, சிஎஸ்கே அணியின் வீரர்களான சிவம் துபே மற்றும் டெவான் கான்வே ஆகியோர் காயத்தால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

csk vs rcb

இந்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏ

னெனில் 21 வயதான வேகப் பந்துவீச்சாளர் பதிரண கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கடைசி ஓவர்களில் சிறந்த பந்து வீச்சாளராக காணப்பட்டார்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

ஐபிஎல்2024

ஆனால் இந்த முறை, அவர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ஆடுவதே சந்தேகமாக மாறியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி பதிரண குறைந்தது நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

dhoni csk

2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் முதல் சில போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது. ஐபிஎல் 2024 முடிவிற்குப் பிறகு டி20 உலகக் கோப்பை 2024 நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியமும் அவருக்கு அனுமதி வழங்குவதற்கு முன் எச்சரிக்கையான அணுகுமுறையை கையில் எடுக்கும்.

எனவே, சிஎஸ்கே அணி அவரை மட்டுமே நம்பி இருக்க முடியாது. ஆனால் அவருக்கு பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் பந்து வீசக் கூடும் என கூறப்படுகிறது.

முஸ்தபிசுர் ரஹ்மான் 

2024 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே ரூ 2 கோடிக்கு முஸ்தபிசுர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்தது.

சிஎஸ்கேயிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அடி: காயத்திற்குள்ளாகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்! | Matheesha Pathirana Injured Csk Vs Rcb Dhoni Virat

முஸ்தபிசுர் ரஹ்மான் இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

எனினும், எங்குமே அவர் பெரிய அளவில் தனது முத்திரையை பதிக்கவில்லை. இது போன்ற வீரர்கள் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் ஆடும் போது சிறப்பாக ஆடுவார்கள் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016