ஐபிஎல் சம்பியன் கிண்ணத்தை மீண்டும் தனதாக்கியது றோயல் சலஞ்சர்ஸ்
சற்றுமுன்னர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிண்ண இறுதிப்போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 05விக்கெட்டுக்களால் குஜராத் டைட்டன்ஸை் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது தடவையாக கிண்ணத்தை தனதாக்கியது.
156 ஓட்டங்கள் எடுத்தால்வெற்றி என களமிறங்கிய அவ்வணிக்கு விராட்கோலி தூணாக நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அவர் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை எடுத்தார்.
புதிய இணைப்பு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியை பெங்குளூரு பந்து வீச்சாளர்கள் தமது பந்துவீச்சு திறமையால் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதன்படி தனது முதல் இனிங்சில் குஜராத் அணி 20 ஓவர் நிறைவில் 8 விக்கட் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
குஜராத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி தமது விக்கட்டுக்களை குறைந்த ஓட்டங்களுக்கு பறிகொடுத்தனர்.
[UWZM6B ]
எனினும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய வொசிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி பெங்குளூரு அணிக்கு வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பதிதார் டாஸ் வென்று பந்துவீச்சைத் தீர்மானித்தார் .
குவாலிஃபையர் 1-ல் விளையாடிய அதே அணியுடன் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது.
இந்த போட்டியில் ஆர்.சி.பி தனது ஆடும் லெவனைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் சேர்க்கப்பட்டு ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணி
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் ஒருமுறை சாம்பியனும் 2023-ஆம் ஆண்டின் ரன்னர்-அப்புமான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
RCB : விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார்
RCB இம்பாக்ட் பிளேயர் : வெங்கடேஷ் ஐயர், கனிஷ்க் சோஹன், ஸ்வப்னில் சிங், அபிநந்தன் சிங், ஜோர்டான் காக்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ககிசோ ரபாடா, அர்ஷத் கான், முகமது சிராஜ்
இம்பாக்ட் பிளேயர் : பிரசித் கிருஷ்ணா, க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, சாய் கிஷோர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |