கில்லின் அதிரடி சதம் - வலுவான நிலையில் குஜராத் அணி..!
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டியில் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் சதம் கடந்துள்ளர்.
60 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதிரடி ஆட்டத்தின் மூலம் 129 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
குறித்த சதமானது கில்லினுடைய நடப்பு ஐபிஎல் தொடரில் பெற்றுக்கொண்ட மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு சுற்றில் 800 ஓட்டங்களை கடந்த 3 வது வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
மும்பை அணி
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 233 ஓட்டங்களை பெற்று கொண்டது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இந்நிலையில் முதலாவது பிளேஓப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.