அமெரிக்காவுக்கு பேரிடி! ஹார்மோஸ் ஜலசந்தியை வைத்து ஈரானின் முக்கிய நகர்வு
ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக சில எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதற்காக ஈரான் புதிய நிபந்தனைகளை பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.
இதன்படி, அவ்வாறு அனுமதிக்கப்படும் எண்ணெய் கப்பல்கள் தனது கையிருப்பில் உள்ள எண்ணெயை சீனாவின் யுவான் நாணயத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அறிமுகப்படுத்தப்படலாம் என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டம்
இந்த நிலையில், ஈரான், இந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் இந்த கடல்வழிப்பாதை குறித்து சந்தைகளில் ஏற்பட்ட அச்சம் காரணமாக, எண்ணெய் விலை ரஷ்ய உக்ரைன் போர் நடந்த பின்னர் 2022 ஜூலை மாதத்துக்குப் பிறகு காணப்பட்ட உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.
மனிதாபிமான உதவிகள் பாதிப்பு
மேலும், கப்பல்கள் இந்த கடல்வழிப்பாதை வழியாக செல்லும் எண்ணிக்கை குறைந்தால் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச் செயலாளர், “இந்த பாதை வழியாக கப்பல்கள் செல்லாமல் நிற்கும் போது அதன் விளைவுகள் விரைவாக உலகம் முழுவதும் உணரப்படும். உணவு, மருந்து, உரம் மற்றும் பிற தேவையான பொருட்களை கொண்டு செல்வது கடினமாகி, அதன் செலவும் அதிகரிக்கும்.” என்று அவர் எச்சரித்ததுள்ளார்.
உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டொலர் நடைபெற நிலையில் தற்போது, ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை சீன யுவானில் செய்ய வேண்டும் என்று கூறினால், அது டொலரின் உலக ஆதிக்கத்தை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகள் விதித்துள்ளது. டொலர் வழியாக வணிகம் செய்தால் அந்த தடைகள் அதிகமாக பாதிக்கும். ஆனால் யுவான் மூலம் வணிகம் செய்தால், அந்த தடைகளை ஒரு அளவுக்கு தவிர்க்க முடியும் என்றும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |