வெளிநாடொன்றின் மிகப்பெரிய எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்!
குவைத் நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் டேங்கர்களில் ஒன்றான “Al Salmi” மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குவைத் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் டுபாய் துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.
குவைத் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த தாக்குதலை “கொடூரமான ஈரான் வான்வழி தாக்குதல்” என்று விவரித்துள்ளதுடன், தாக்குதலால் கப்பலில் சேதம் ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.
ட்ரோன் மூலம் தாக்குதல்
டேங்கர் முழுமையாக எண்ணெய் ஏற்றிய நிலையில் இருந்ததுள்ள நிலையில், தாக்குதலால் கப்பலில் தீப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த தாக்குதல் ட்ரோன் மூலம் நடத்தப்பட்டிருப்பதாக டுபாய் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தொடக்கத்தில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக குவைத் எச்சரித்த நிலையில், இங்கிலாந்தின் கடல்சார் கண்காணிப்பு அமைப்பு இதுவரை சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, அந்த “Al Salmi” கப்பலில் சுமார் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றப்பட்டிருந்ததுடன், அது சீனாவின் கிங்டாவ் துறைமுகமாகத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 21 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்