ஈரானின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பால் சிதறிய அமெரிக்க ட்ரோன்கள்!
ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் இரண்டு MQ-9 ரீப்பர் (Reaper) ரக ட்ரோன்கள், ஒரு புதிய மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பால் (Advanced new defence system) சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தத் தற்காப்பு அமைப்பு மூலம் கடந்த சில மணிநேரங்களில் இஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த இந்த ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம்
MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் முதன்மையாக அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படுபவை என்றாலும் அதன் நட்பு நாடுகளும் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை குறித்து அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து இதுவரை உடனடிப் பதில்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்