அமெரிக்காவை நடுநடுங்க வைத்துள்ள ஈரான் வசமுள்ள யுரேனியம்! ட்ரம்புக்கு மன நிம்மதியான செய்தி
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தை நிறைவேற்றுவது கடினமானது, ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் குரோசி தெரிவித்துள்ளார்.
சர்வதே ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடம் தற்போது சுமார் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட, மதிப்பிடப்பட்ட 440 கிலோகிராம் யுரேனியம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதனை வெளிநாட்டிற்கு நகர்த்துமாறு டொனால்ட் ட்ரம்ப் பலமுறை பரிந்துரைத்துள்ளார்.
யுரேனியத்தின் வீரியம்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ரஃபேல் குரோசி, இந்த நடவடிக்கை அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் இந்த யுரேனியம் வாயு வடிவில் (Gas form) உள்ளதுடன், அதிகளவில் மாசுகளை ஏற்படுத்தக்கூடியது.

எனவே, இதனை கையாள்வது எளிதான காரியமல்ல என்று விளக்கியுள்ளார். மேலும், இதற்கு மாற்றாக அந்த யுரேனியத்தை வீரியம் குறைந்த வடிவத்திற்கு மாற்றும் கலப்பு நீக்கம் செய்யும் முறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நேரடிப் பேச்சுவார்த்தை மேசைகளில் சர்வதேச அணுசக்தி முகமை நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றபோதிலும், குரோசி இது தொடர்பாகத் தெஹ்ரான் மற்றும் வொஷிங்டனுடன் தனித்தனியாகத் தொடர்புகொண்டு பேசி வருவதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |