ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்!
ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக அமீரகப் பகுதியில் ஏவுகணை அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது இத்தாக்குதல் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தீவிரக் கண்காணிப்பு
இதனடிப்படையில் முதல் ஏவுகணை, நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்கு வெளியே போய் விழுந்துள்ளது.
இரண்டாவது ஏவுகணை, அமீரகத்தின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்குள்ளேயே வந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் நோக்கம் கொண்ட எதுவாக இருந்தாலும் அதை உறுதியோடு எதிர்கொள்ளவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் கையாளவும் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரக் கண்காணிப்புடனும் முழுத் தயார்நிலையுடனும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இதன் மூலம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பது உறுதி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |