ஈரானிய கால்பந்து வீரர்களுக்கு அமெரிக்கா போட்ட முட்டுக்கட்டை!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்பதற்கான விசாக்கள் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என ஈரானிய கால்பந்து வீரர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் துருக்கியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மூலமாக இந்த விசாக்களுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் இல்லாததால் வீரர்கள் விசா பெறுவதில் இத்தகைய சிக்கல்களும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கோப்பை
இந்த விசா விவகாரம் உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ஈரான் அணியின் பயிற்சியையும் திட்டமிடலையும் பாதித்துள்ளது.

உலகக் கோப்பையின் ஜி பிரிவில் (Group G) இடம்பெற்றுள்ள ஈரான் அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து ஜூன் 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விளையாடத் திட்டமிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதே நகரில் பெல்ஜியம் அணியையும் பின்னர் சீட்டல் (Seattle) நகரில் எகிப்து அணியையும் ஈரான் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |