அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஹோர்மோஸில் புதிய நிபந்தனையை விதித்தது ஈரான்
ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
ஒரு பொருளாதார பேரழிவு நாளில் அமெரிக்கா அந்நாட்டுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்கும் என்றும், ஈரானுடன் நிதி ரீதியாக கூட்டு சேரும் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
முந்தைய அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பலமுறை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காலக்கெடுவை நீட்டித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ஆட்சிக்கு பெசென்ட் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ஈரான் புதிய எச்சரிக்கை
இந்நிலையில் பெசென்ட்டின் கருத்துக்களை ஈரான் நிராகரித்ததோடு, போர் தொடர்ந்தால் அப்பகுதியிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் தனது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லக்கூடாது என ஈரான் அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகஉம கூறப்படுகிறது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக ஈரானுக்குத் தெற்கே உள்ள நீர்வழியான குறித்த நீரிணை வழியாகச் செல்கிறது, ஆனால் பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து அந்த நாடு இந்த ஓட்டத்தைத் திறம்படத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening