SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு வெளிநாடு செல்ல தடை
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் அவர்களைத் தாக்கியதற்காக பதுளை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை உயர் நீதிமன்றம் 2026இ ஜூலை 28 அன்று ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
வெளிநாடு செல்வதற்கும் தடை
இந்நிலையில் தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8