ஈரானின் அதிரடி தாக்குதலை கண்டித்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக், குறித்த தாக்குதலானது பதட்டங்களைத் தூண்டி, பிராந்தியத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் குழப்பத்தை விதைக்கும் நோக்கத்தில் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு
இந்த இக்கட்டான கட்டத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்றும், அத்துடன் ஜோர்தான் மற்றும் ஈராக் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், நட்பு நாடுகளுடன் சேர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்தவும், மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் பிரித்தானியா அவசர நடவடிக்கை முன்னெடுக்கும் என்றும் ரிஷி சுனக் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Read my statement on the Iranian regime’s reckless attack against Israel. pic.twitter.com/xeuR3cd3kG
— Rishi Sunak (@RishiSunak) April 13, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |