ஹோர்முஸ் நீரிணையில் மோதல் தீவிரம்: பின்வாங்கப் போவதில்லை என ஈரான் அதிரடி
ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள கடல்சார் முடக்கங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது நாட்டின் வியூக ரீதியான கடல் வழிகளையும் எல்லைகளையும் பாதுகாக்க ஈரான் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், தங்களது படைகள் எதிரிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் எதிரிப் படைகளை ஒரு அடி கூட பின்வாங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
பிராந்தியப் பதற்றம்
அத்தோடு “இன்று நாட்டின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த நீரிணைகளும் கடல் வழிகளும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
அப்பகுதிகளில் தனது பலமான பிரசன்னத்தின் மூலம் தேசிய நலன்களையும் நாட்டின் பாதுகாப்பையும் பாதுகாக்கும் பணியை ஈரானிய கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஆயுதப் படைகள் முழு பலத்துடன் எதிரிகளுக்கு எதிராக உறுதியுடன் நிற்பதாகவும் எதிரிப் படைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஒரு அடி கூட முன்னெடுத்து வைப்பதையோ அல்லது தங்களை பின்வாங்க வைப்பதையோ அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு பரஸ்பரக் கடற்படை முற்றுகை தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், ஈரானியக் கடற்படையின் இந்த எச்சரிக்கை அறிக்கை பிராந்தியப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்மை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |