மீண்டும் திறக்கப்பட்ட ஈரானின் ஆறு விமான நிலையங்கள்
புதிய இணைப்பு
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தனது வான்வெளியின் ஒரு பகுதியை ஈரான் மீண்டும் திறந்துள்ளதைத் தொடர்ந்து, ஆறு விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானிய விமான நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் மற்றும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம், அத்துடன் மஷ்ஹத், பிர்ஜந்த், கோர்கன் மற்றும் ஜாஹெதான் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஈரானின் வான்பரப்பு இன்று (18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வான்பரப்பு திறக்கப்படுவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூடப்பட்ட ஈரான் வான்வெளி
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் கிழக்குப் பகுதிக்கு மேலுள்ள வான்வழிப் பாதைகள் சர்வதேச விமானப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |