மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமையகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் மற்றும் அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB ஆகியவை, ஆயுதப் படைகள் அப்பகுதியைக் கட்டுப்படுத்தும் நிலையில், அந்த நீர்வழிப்பாதை அதன் முந்தைய நிலைக்கு திரும்பும் என்று IRGCயின் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் முற்றுகை என்ற போர்வையில் அமெரிக்கா கடற்கொள்ளை மற்றும் கடல்வழித் திருட்டுச் செயல்களைத் தொடர்கிறது" என்று IRGCயின் கூட்டு இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெளியிட்ட அறிவிப்பு
இந்தக் காரணத்தால், ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளதுடன் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி தற்போது ஆயுதப் படைகளின் கடுமையான முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்று IRIBஐ மேற்கோள் காட்டிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🚨 BREAKING
— IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) April 18, 2026
Iran's Central Military HQ:
Iran agreed to allow a limited number of ships to pass through the Strait of Hormuz according to agreements.#But U.S. did not fulfill their obligations.
🚨 So, the Strait of Hormuz is now #closed again and passage requires IRAN approval.
ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் ஈரானை நோக்கி வரும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை அமெரிக்கா முழுமையாக உறுதிப்படுத்தும் வரை, ஹோர்முஸ் நீரிணையின் மீதான இந்த இறுக்கமான கட்டுப்பாடு நீடிக்கும் என்றும் ஈரானிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |