ஈரானிய மக்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் நிலையில், மின்சாரப் பயன்பாட்டைக் "கட்டுப்படுத்துமாறு" ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"எதிரிகள் நமது உள்கட்டமைப்பை அழித்து, நம்மை முற்றுகையிடுகிறார்கள். இதனால் மக்கள் அதிருப்தி அடைந்து, தற்போதைய திருப்தி அதிருப்தியாக மாறுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
மின்சார பாவனையை மட்டுப்படுத்த கோரிக்கை
மேலும் அவர், "வீட்டில் 10 மின்விளக்குகளுக்குப் பதிலாக இரண்டு மின்விளக்குகளை எரிய விட வேண்டும்; அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்டுள்ளார்.

ஈரானிய மின்சார நிறுவனமான தவனீரின் தலைமைச் செயல் அதிகாரியும், ஈரானியர்கள் தங்கள் பயன்பாட்டைக் கண்காணித்து, அங்கீகரிக்கப்படாத எந்தவொரு பயன்பாட்டையும் முறைப்பாடு அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் என ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் டெலிகிராமில் பகிர்ந்த காணொளி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்