முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை! ஈரானின் முக்கிய அறிவிப்பு
புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாக ஓமானுடன் ஈரான் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அறிவித்துள்ளார்.
நீரிணையை நிர்வகிப்பதற்கான பரஸ்பர வழிமுறை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஓமானுடனான புதிய வழித்தடம் தொடர்பான புரிந்துணர்வு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதற்கோ அல்லது தொடர்ந்து மூடப்பட்டிருப்பதற்கோ தொடர்பற்றது என்று பாகாயி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படை முற்றுகை
இந்த ஒப்பந்தத்தை ஒரு தேவையான நிபந்தனை மட்டுமே என விவரித்துள்ள அவர், குறித்த விவகாரத்திற்கு இது ஒரு தீர்வாக மாறாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியதும், ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகையுமே நீரிணை மூடப்பட்டதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், அதனை மீண்டும் திறப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |