பின்வாங்கிய ட்ரம்ப்..! துப்பாக்கியின் முனையிலேயே கைகள் - ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் இன்று புதன்கிழமை அதிகாலையில் இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது நடத்தப்படவிருந்த மிகப்பாரிய தாக்குதலுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, அந்த நாட்டுடன் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அவமானகரமான பின்வாங்கல்
இவ்வாறான பின்னணியில், அமெரிக்கத் தரப்பின் மீது “முழுமையான அவநம்பிக்கையுடன்” பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி “எந்தவொரு மீறல்களுக்கும் பதிலடி கொடுக்க ஈரானியப் படைகள் தயாராக உள்ளன” என்றும், “துப்பாக்கியின் முனையிலேயே கைகள் உள்ளன” என்றும் எச்சரித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஈரானின் நிபந்தனைகளை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகக் கூறும் அறிவிப்பை ஈரானிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியதுடன் அதனை அமெரிக்க ஜனாதிபதியின் "அவமானகரமான பின்வாங்கல்" என்றும் வர்ணித்ததுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், தங்களது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் நிலைக்குத் தள்ளியிருப்பதாக ஈரான் கொண்டாடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |