எவருமே பயன்படுத்தாத ஆயுதத்தால் தாக்குவோம் : இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான்

Missile Iran-Israel Cold War
By Sumithiran Apr 16, 2024 10:48 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

எம்மீது இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை தாக்கினால் இதுவரை எவருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) இஸ்ரேல் இராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். பிரதமர் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும்

இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவருமே பயன்படுத்தாத ஆயுதத்தால் தாக்குவோம் : இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான் | Iran Threatens Israel

இஸ்ரேலின் சனல் 12 செய்தியின்படி, ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் அது முழுமையான போருக்கு வித்திட்டுவிடக் கூடாது என்ற வகையில் போர் விவகாரங்கள் அமைச்சகம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

சவக்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானின் 450 கிலோ ஏவுகணை

சவக்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானின் 450 கிலோ ஏவுகணை

ஐந்து மணிநேர தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன.

எவருமே பயன்படுத்தாத ஆயுதத்தால் தாக்குவோம் : இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான் | Iran Threatens Israel

இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களில் 80-ஐ அமெரிக்கா வீழ்த்தியது. ஈரான், ஏமனில் இருந்து ஏவப்பட்ட 6 ஏவுகணைகளை வீழ்த்தியது. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேலை விடாது துரத்தும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கை விடுத்த இப்ராஹிம் ரைசி

இஸ்ரேலை விடாது துரத்தும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கை விடுத்த இப்ராஹிம் ரைசி

“மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது. அமைதியை நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025