இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வகை ஆயுதங்கள்! அதிர வைக்கும் ஈரானின் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வகை ஆயுதங்களை ஈரான் பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டின் இராணுவ பேச்சாளர் அமீர் அக்ரமினியா தெரிவித்துள்ளார்.
ஈரான் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியதாவது, “இந்த போரில் நாம் முன்பு பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளோம்.
வரும் நாட்களில் மேலும் அத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தப் போகிறோம். அவற்றின் தாக்கத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.”
கிளஸ்டர் குண்டுகள்
ஈரானின் தாக்குதல்களுக்கு அதிகமாக இலக்கான நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் மக்கள், சமீப காலங்களில் தடுப்பு நடவடிக்கைகளின் போது ஏற்படும் வெடிப்பு சத்தங்கள் அதிகமாகவும் வலுவாகவும் கேட்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளில் கிளஸ்டர் குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
ஜூன் மாதத்தில் நடைபெற்ற 12 நாள் போரின்போதும் இவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது அவற்றின் பயன்பாடு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |