ரஷ்யாவிற்கு எதிராக திரும்பும் ஈரான் ஆயுதங்கள்
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த ஈரான் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க படைகளின் தலைமை கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படும்போது கைப்பற்றப்பட்ட ஈரான் ஆயுதங்களை உக்ரைன் இராணுவப் பயன்பாட்டுக்காக அனுப்பியுள்ளோம்.
கப்பல்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
2021-ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி முதல், 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 15 வரை எந்த நாடும் சொந்தம் கொண்டாடாத கப்பல்களில் இருந்து இந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெருமளவு ஆயுதங்கள்
ஏப். 4ஆம் திகதி உக்ரைன் இராணுவத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ஆயுதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏகே-47 துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், தொலைவிலிருந்து துல்லியமாகக் குறிபாா்த்து சுட உதவும் ‘ஸ்னைப்பா்’ ரகத் துப்பாக்கிகள், தோளில் வைத்து சுடக்கூடிய ஆா்பிஜி-7 ஆயுதங்கள், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட 7.62 எம்எம் குண்டுகள் ஆகியவை அடங்கும்.
தங்கள் நாட்டின் மீது படையெடுத்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிராகப் பயன்படுத்த உக்ரைன் இராணுவத்துக்கு இந்த ஆயுதங்கள் உதவும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |