அமெரிக்காவுடனான மிக முக்கியமான பேச்சுவார்த்தை...! இஸ்லாமாபாத்திற்கு வருகை தரும் ஈரானிய குழு

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 09, 2026 06:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்காவுடனான மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரானிய உயர்மட்டக் குழு வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைப் பாகிஸ்தானுக்கான ஈரானிய தூதுவர் ரேசா அமிரி மொகடம் (Reza Amiri Moghadam) உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்களால் ஈரானிய பொதுமக்களிடையே சந்தேகம் நிலவியபோதிலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று இந்த வருகை அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்

அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்

பத்து அம்சத் திட்டம்

ஈரான் முன்மொழிந்துள்ள பத்து அம்சத் திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), புதன்கிழமை அன்று பேசுகையில் சற்று கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

அமெரிக்காவுடனான மிக முக்கியமான பேச்சுவார்த்தை...! இஸ்லாமாபாத்திற்கு வருகை தரும் ஈரானிய குழு | Iran Us Peace Talks Islamabad Jd Vance Ghalibaf

லெபனான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் ஏற்கனவே போர்நிறுத்தத்தை மீறிவிட்டதாகவும், இத்தகைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமற்றது என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இருப்பினும், இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானியத் தரப்பு இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முன்வந்துள்ளது.

ஈரானை பலப்படுத்திய ட்ரம்ப்! போர் நிறுத்தம் எனும் அமெரிக்க ராஜதந்திரம்

ஈரானை பலப்படுத்திய ட்ரம்ப்! போர் நிறுத்தம் எனும் அமெரிக்க ராஜதந்திரம்

அமைதி ஒப்பந்தம்

இந்த அமைதி ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் லெபனானும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் ஈரானும் உறுதியாக உள்ளன.

ஆனால், இந்த போர்நிறுத்தமானது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது என அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுடனான மிக முக்கியமான பேச்சுவார்த்தை...! இஸ்லாமாபாத்திற்கு வருகை தரும் ஈரானிய குழு | Iran Us Peace Talks Islamabad Jd Vance Ghalibaf

இந்த முரண்பாடான நிலைப்பாடுகளுக்கு மத்தியில் சனிக்கிழமை தொடங்கும் பேச்சுவார்த்தையில் எத்தகைய உடன்பாடு எட்டப்படும் என்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

அமெரிக்கத் தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான குழு இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019