ஹோர்முஸை புவியியல் அணு குண்டாக பயன்படுத்தும் ஈரான்
அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது இரு தரப்பையும் கடந்து ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கியபோது அணுசக்தி விவகாரம், ஏவுகணைத் திட்டம், பிராந்தியத்தில் உள்ள ஈரானின் சக்திகள் அல்லது கூட்டாளிகள் எனப் பல விடயங்கள் பேசப்பட்டன.
மோதல் அடுத்த கட்டத்திற்கு
ஆனால் இப்போது அனைவரும் சுற்றிச் சுற்றி வரும் முக்கிய விடயம் நீரிணையை திறப்பதுதான் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

போருக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, போருக்குப் பிறகு அப்படி இருக்காது என்று கூறிய அவர்கள் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையின் மூலம், ஈரான் ஒரு சாதகமான நிலையைக் கண்டறிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
மேலும், சில ஆய்வாளர்கள் இதை ஈரானின் புவியியல் அணு குண்டு என்று கூட வர்ணிக்கின்றனர். ஏனெனில், அதைச் செயல்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம், அதைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதே காரணமாகவும் எனவும் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |