இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டம்
ஈரான் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கோரியதையடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்(United Nations Security Council) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த கூட்டமானது ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கிலுள்ள உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி 15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலக இது இடம்பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
புரட்சிகர காவல்படை
இது தொடர்பாக மேலும் தெரிவயவருகையில், கடுமையான அத்துமீறல்களுக்காக ஈரானைக் கண்டித்து உடனடியாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை(Islamic Revolutionary Guard Corps) ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க கூட்டத்தை கூட்ட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் குறித்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலியா தூதுவர் கிலாட் எர்டன்(Gilad Erdan) சனிக்கிழமை முன்வைத்திருந்தார்.
ஐக்கிய நாடுகள்
இதையடுத்து அவர் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் கவுன்சிலின் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், நடைபெறும் இந்த தாக்குதல் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரமான அச்சுறுத்தல் என தெரிவித்திருந்தார்.
அத்தோடு ஈரானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க கவுன்சில் எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ(António Guterres) மற்றும் பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ்(Dennis Francis) ஆகியோர் இந்தத் தாக்குதல் குறித்து தனித்தனியாகக் குரல் கொடுத்துள்ளனர்.
பதற்றம்
அதாவது இப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க இஸ்ரேலும் மற்றும் ஈரானும் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சனிக்கிழமை இஸ்ரேலுக்கு எதிராக வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.
இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையின் இரண்டு உயர்மட்ட ஜெனரல்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியதுடன் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.
டெல் அவிவ் அதிகாரப்பூர்வமாக தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை ஆனால் பல மாதங்களாக சிரியா முழுவதும் ஈரானிய இலக்குகளுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும் தாக்குதல் தண்டிக்கப்படாமல் போகாது என ஈரான் மற்றும் லெபனானில் உள்ள அதன் முக்கிய கூட்டாளியான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |