இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம்

Donald Trump Wimal Weerawansa Sri Lanka United States of America Iran
By Sathangani Mar 07, 2026 12:39 PM GMT
Report

ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஈரான் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மிலான் 2026 பயிற்சியில் பங்கேற்க வருகை தந்திருந்தனர்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இந்திய உளவுத்துறை

திட்டமிட்டபடி அமெரிக்கக் கடற்படையும் இதில் பங்கேற்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர். அதே காலகட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம் | Iran War Us Plan To Turn Sri Lanka Into A War Zone

ஈரான் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்ததாலேயே அமெரிக்கா இந்தப் பயிற்சியிலிருந்து விலகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஈரான் குழுவினர் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறித்து இந்திய உளவுத்துறையான ரோவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரான் ஒருபோதும் சரணடையாது: ட்ரம்பின் கருத்துக்கு எதிராக பகிரங்க எச்சரிக்கை

ஈரான் ஒருபோதும் சரணடையாது: ட்ரம்பின் கருத்துக்கு எதிராக பகிரங்க எச்சரிக்கை

கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி

ஈரானின் இரண்டாவது கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இக்கப்பலை அனுமதித்தால் வான்வழியாகத் தாக்குதல் நடத்த நேரிடும் என அவர்கள் அச்சுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் துய்யகொந்தா, இக்கப்பல் விவகாரத்தில் இலங்கை பொறுப்பேற்க முடியாது என ஈரான் தூதருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம் | Iran War Us Plan To Turn Sri Lanka Into A War Zone

இருப்பினும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் ஜனாதிபதியைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.

நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் படி கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.கப்பலில் உள்ள நபர்களை மட்டும் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வர முடிவெடுத்துள்ளனர்.

பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை

பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை

இராணுவ மையமாக மாற்ற முயற்சி

மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை ஒரு இராணுவ மையமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதான சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம் | Iran War Us Plan To Turn Sri Lanka Into A War Zone

முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டது போல, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட மையப்புள்ளியாக இலங்கை இருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் சிதைவுகள்

ஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் சிதைவுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026