பாரசீக வளைகுடாவின் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை! ஈரானின் அறிவிப்பால் பதற்றம்
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகையிடத் திட்டமிட்டுள்ள நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடலில் உள்ள எந்தவொரு துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை அறிவித்துள்ளது.
கடல்சார் கொள்ளையடிப்பு
அதன்படி , ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்த கடல்சார் முற்றுகையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தவுள்ள அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை "கடல்சார் கொள்ளையடிப்பு" மற்றும் "சட்டவிரோத நடவடிக்கை" என்று ஈரான் கண்டித்துள்ளது.
பாரசீக வளைகுடாவின் துறைமுகங்கள்
இது குறித்து IRGC செய்தித் தொடர்பாளர், "எங்களுடைய துறைமுகங்கள் அச்சுறுத்தப்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் உள்ள எந்தவொரு துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது.

பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், இல்லையெனில் யாருக்கும் இருக்காது." என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், முற்றுகை நடவடிக்கையானது மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் என்றும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |