ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது! பெசெஷ்கியன் அறிவிப்பு
ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.
அத்தோடு, ஈரான் போரையோ அல்லது எல்லை விரிவாக்கத்தையோ விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி அரச ஒளிபரப்புச் சேவை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தனது தற்காப்புத் திறன்களையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக மட்டுமே செயல்படுவதாக பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அழுத்தங்கள்
ஈரானைக் குறிவைப்பதற்காக அமெரிக்கா வளைகுடா நாடுகளில் உள்ள இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதாகவும், ஈரானுக்கும் அதன் பிராந்திய அண்டை நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருப்பினும், ஈரான் தனது அண்டை நாடுகளுடனான பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாகத் தெரிவித்த பெஷெஷ்கியன், ஈரானுக்கு எதிரான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நிறுத்தப்பட்டால் பிராந்தியத்தில் பதற்றங்கள் நீடிப்பதற்கு எந்தவொரு காரணமும் இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |