பாகிஸ்தானில் பேச்சு : இதுவரை முடிவெடுக்காத ஈரான்
ஈரானுடனான பேச்சில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க குழு பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ள நிலையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈரான் பங்கேற்குமா என்பதை இதுவரை எந்தவொரு ஈரானிய அதிகாரியும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய இரண்டு ஈரானிய ஊடகங்கள், ஈரானின் பங்கேற்பு குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அமெரிக்கத் தடை இருக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் சேர மாட்டோம்
அமெரிக்கத் தடை இருக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் சேர மாட்டோம் என்று ஈரானியக் குழு வலியுறுத்தியுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தஸ்னிம் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூலத்தை மேற்கோள் காட்டி, அடுத்த சுற்றில் சேருவதா வேண்டாமா என்பதை ஈரான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த நிலைமை "சாதகமாக இல்லை" என்று ஃபார்ஸ் விவரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |