ஈரானுக்கான கடைசி வாய்ப்பு! ஒட்டுமொத்தமாக தகர்க்கத் தயாரான ட்ரம்ப்
Donald Trump
Middle East
Iran-Israel War
Iran-US Conflict
By Dhilak
ஈரானுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான 'கடைசி வாய்ப்பு' இதுவே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் செய்த அதே 'தவறை' தாம் ஒருபோதும் செய்யப்போவதில்லை என்றும் ட்ரம்ப் இதன்போது வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஈரானுடன் பேச்சு நடத்த நாளை பாகிஸ்தான் செல்கிறது அமெரிக்க குழு : ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
மிரட்டல்
இந்த முறை ஈரான் குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திடத் தவறினால், அந்த நாடு ஒட்டுமொத்தமாகத் தகர்க்கப்படும் என அவர் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், ஈரானின் எதிர்காலம் குறித்து ட்ரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு 11 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி