ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : உயர்மட்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்
சிரியாவில் இஸ்ரேல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் விமான தாக்குதலில் ஈரான் உயர்மட்டத்தளபதி கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய விமானப்படை திங்களன்று சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்திற்கு அடுத்த கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் சிரியாவில் உள்ள ஈரானிய உயர் தளபதி உட்பட ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சிரியா-லெபனான் தலைவரான
இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிகர படையின் சிரியா-லெபனான் தலைவரான மொஹமட் ரேசா சஹேதி என்பவரே கொல்லப்பட்டவராவார்.
Iran’s top commander in Syria killed in airstrike; Tehran blames Israel, vows revenge https://t.co/YryrnHEj2O via @timesofisrael
— jasotharan (@jasotha64751577) April 2, 2024
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பேற்கவேண்டுமென ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் தெரிவித்துள்ளார். டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான தாக்குதல் "அனைத்து சர்வதேச மரபுகளையும் மீறுவதாகும்" என்று அமிரப்டோலாஹியன் மேலும் கூறினார்.
தாக்குதலுக்கு ஈரானின் பதிலடி கடுமையாக
தாக்குதலுக்கு ஈரானின் பதிலடி கடுமையாக இருக்கும் என்று சிரியாவில் உள்ள ஈரான் தூதுவர் எச்சரித்ததை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஜனவரியில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் குட்ஸ் படைத் தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்த பின்னர் ஈரானுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு இதுவென தெரிவிக்கப்படுகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |