உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை : நடவடிக்கை எடுப்பாரா வடக்கு ஆளுநர்

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer May 30, 2025 07:42 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ். மாநகர சபையினரின் (Jaffna Municipal Council) பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

எனினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல், தொடர்ச்சியாக அதே தவறுகளை இழைத்து பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கல்லூண்டாய் பகுதியில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தொடர்ச்சியாக தீ வைக்கப்படுகிறது.

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

கழிவுப்பொருட்களுக்கு தீ வைத்தல்

வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளுக்கு இதன்போது தீ வைப்பதால் அந்த புகையானது வீதி எங்கும் பரவுகின்றதுடன் குடிமனைகளுக்குள்ளும் செல்கின்றது.

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை : நடவடிக்கை எடுப்பாரா வடக்கு ஆளுநர் | Irresponsible Actions Of Jaffna Municipal Council

இதனால் வீதியில் செல்பவர்களும், அண்மித்த பகுதிகளில் குடியிருப்பவர்களும் அந்த புகையை சுவாசிப்பதனால் சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், வீதியில் புகை பரவும்போது எதிரேயும், முன்னேயும் செல்கின்ற வாகனங்கள் கண்களுக்கு தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு உயிராபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்குள் இவ்வாறு ஒரு தடவை கழிவுகளை எரியூட்டும் போது அந்த வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் வீதியில் சென்றவர்கள் அவருக்கு முதலுதவியளித்த சம்பவமும் இடம்பெற்றது.

நிறுத்தப்படும் யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை....! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நிறுத்தப்படும் யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை....! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கழிவுப் பொருட்கள் வீதியில் பரவுதல்

உயிர்களுக்கு இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் யாழ். மாநகர சபையானது அதற்கான இழப்பீடுகளை வழங்குமா? சுகாதாரமான சூழலில் வசிக்க, சுகாதாரமான காற்றை சுவாசிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உள்ளது. இதற்கு யாழ். மாநகர சபையானது குந்தகம் விளைவிப்பது சட்டப்படி குற்றமாகும்.

அதுமட்டுமல்லாமல் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் உயிரிழந்து காணப்பட்டாலும் அவற்றை மாநகர சபையினர் விரைந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை.

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை : நடவடிக்கை எடுப்பாரா வடக்கு ஆளுநர் | Irresponsible Actions Of Jaffna Municipal Council

மேலும், கழிவுப் பொருட்களை கழிவகற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது உரிய விதத்தில் எடுத்துச் செல்லாததால் கழிவுப் பொருட்கள் வீதியில் பரவுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

மக்களை பாதுகாக்க வேண்டிய மாநகர சபையே மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானதாக காணப்படுகிறது.

TIN இலக்கத்தைப் பதிவு செய்ய அறிமுகமான கியூஆர் குறியீடு

TIN இலக்கத்தைப் பதிவு செய்ய அறிமுகமான கியூஆர் குறியீடு

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறான கழிவுப் பொருட்களை இயற்கை உரமாக மாற்றும் செயற்பாடுகளில் மானிப்பாய் பிரதேச சபையானது ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருக்கின்றபோது இவ்வாறானா கழிவுப் பொருட்களை தம்மிடம் வழங்குமாறும், தாங்கள் அதனை இயற்கை பசளையாக தயாரிப்பதாகவும் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தபோதும் மாநகர சபையானது அந்த கழிவுப் பொருட்களை வழங்க மறுத்துள்ளது.

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை : நடவடிக்கை எடுப்பாரா வடக்கு ஆளுநர் | Irresponsible Actions Of Jaffna Municipal Council

இனப்படுகொலை தொடர்பான நினைவேந்தல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்கு நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்யும் காவல்துறையினரோ, இது குறித்து செயற்படும் தன்னார்வ நிறுவனங்களோ இவ்வாறான பொதுப் பிரச்சினைகளுக்கு தங்கள் சார்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கு ஏன் முயற்சிப்பதில்லை? இந்த பிரச்சினை இவ்வாறு தொடருமானால் விளைவுகள் வீபரீதமாக இருக்கும்.

எனவே வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் (செற்பாடு) ஸ்.பி.தவகிருபா மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் ஆகியோர் இந்த பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரப் பரவலாக்கல் - வடக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதா...! பொங்கியெழும் சரத்வீர சேகர

அதிகாரப் பரவலாக்கல் - வடக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதா...! பொங்கியெழும் சரத்வீர சேகர

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்