வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் குறித்து அவசர எச்சரிக்கை
நிலவும் மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமை தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் (Irrigation Department) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
களனி, களு, ஜிங், நில்வலா, மஹாஓயா மற்றும் அத்தனகலு ஓயா தொடர்பான வெள்ள நிலைமை பற்றிய சமீபத்திய அறிவிப்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் “களு கங்கை புதுபவுல மற்றும் அலகாவ பிரதேசங்களிலும், மில்லகந்த பிரதேசத்திலும் இன்னும் பாரிய வெள்ள நிலைமை காணப்படுவதையே இது காட்டுகிறது.
பாரிய வெள்ளப்பெருக்கு
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவல கங்கையின் தல்கஹகொட பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, அதுவும் பெருகி வருகின்றது.
அத்தனகலு ஓயாவில் தொடர்ந்தும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள போதிலும், அது சிறிதளவு குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |