உணவுப் பற்றாக்குறையால் இலங்கை திண்டாடுகிறதா?
இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை என்று நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
அரசாங்கம் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனி போன்ற பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்து மீள்வதற்கு ஏற்றவகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.